Food Security Bill CM writes another letter to PM
சென்னை, ஆக. 25: தமிழக அரசின் சார்பில் தாம் குறிப்பிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து போதிய திருத்தங்களை உணவு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வரவேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:-
மத்திய அரசால் அவசர அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆகஸ்ட் 2ம் தேதி நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். நான் தெரிவித்த யோசனைகளில் சிலவற்றை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு மசோதாவில் சில திருத்தங்கள் செய்து இருப்பதாக அறிகிறேன். இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எனது வேண்டு கோளின்படி பொதுவிநியோக திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்படும் உணவு தானியங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஆகும். இதன்படி இந்த மசோதாவில் 3வது பிரிவில் தற்போது மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்களின் அளவை பாதுகாப்பதற்கான ஷரத்து கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாநிலமும் பெறவேண்டிய உணவு தானியங்கள் குறித்து மசோதாவின் 4-வது பிரிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த ஷரத்துகளில் இதற்கான விலை நிர்ணயம் மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப பொருளாதார ரீதியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி செலவாகும். மாநில அரசுகள் மீது குறிப்பாக தமிழ்நாட்டின் மீது நிதிச்சுமையை ஏற்படுத்தும் இந்த முக்கியமான பிரச்சனை குறித்து புதிய மசோதாவில் சில சட்டபூர்வமான உறுதிகளை அளிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். 1. மசோதாவின் 2-வது பிரிவில் 3 (1)ல் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் இதேபிரிவில் உள்ள தகுதிகள் ஆகியவற்றை பிரிவு 3 (2) உடன் சேர்த்து வாசிக்க வேண்டும். இதே அளவில் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் கிலோ ரூ.3 விலையில் வழங்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள பிரிவினருக்கான தற்போதைய கிலோ ரூ.8.30 விலை பொருந்துவதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவான உறுதி அளிக்கப்பட வில்லை என்பதால் மசோதாவின் 2-வது பிரிவில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இந்த பிரிவில் 3 (1) அல்லது 4-வது அட்டவணையில் ஒதுக்கீடு செய்யப்படும் உணவு தானியங்களுக்கான விலை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும் எனது யோசனையின்படி இந்த மசோதாவில் 3 (2) பிரிவில் நகர்ப்புற குடும்பத்தினர் அனைவரையும் மானிய விலை உணவு தானியம் பெறுவோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது ஏற்கப்படவில்லை. எனது முந்தைய வேண்டுகோளின்படி நகர்புற மக்களில் 100 சதவீதம் பேரையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அல்லது கிராமப்புறங்களுக்கு இணையாக குறைந்தது 75 சதவீத நகர்ப்புற மக்களையாவது இதில் சேர்க்க வேண்டும். அவரச சட்டத்தின் முதல் அட்டவணையில் தெரிவிக்கப் பட்டுள்ளபடி மானிய விலை உணவு தானியம் வழங்குவது முதல் 3 ஆண்டுகளுக்கே உறுதிப்படுத்தப் படும் என்பது மாற்றப்பட்டு நீண்ட காலத்திற்கு வழங்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும். எனது இந்த யோசனை ஏற்கப் படவில்லை. எனது வேண்டுகோளை மீண்டும் பரிசீலனை செய்து குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது இதற்கான உறுதிமொழியை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதாவின் 23வது பிரிவிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி தற்போதைய மத்திய அரசே தேவைப்படும்போது உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு குறைந்தபட்ச நிதிஉதவியை வழங்கிவிட்டு இதற்கான பொறுப்பை மாநில அரசுகளிடம் விட்டுவிடக் கூடாது.
தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் மத்திய அரசே உணவு தானியங்களை இறக்குமதி செய்யவேண்டும் என்ற ஷரத்தையும் இந்த மசோதாவில் சேர்ப்பது மிக முக்கியமானதாகும். மசோதாவின் முதல் பிரிவில் 10 (1)ன்படி தகுதி உடைய குடும்பத்தி னர்களை மாநில அரசுகளே உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 180 நாட்களுக்குள் அடையாளம் காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடு நாட்களை 365ஆக விரிவுபடுத்த வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மாநிலங்களில் நடந்துகொண்டு இருப்பதால் இந்த ஒரு ஆண்டு காலக்கெடுகூட போதுமானதாக இருக்குமா என்பது இறுதியாக தெரியவில்லை. தேவைக்கு ஏற்ப இதைக்கூட மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மேலும் மசோதாவின் 12 (2) (எச்) பிரிவின்பட மத்திய அரசு, இந்தப் பகுதிகளில் பணபரிமாற்ற திட்டத்தையும் மற்றும் உணவு தானிய கூப்பன் திட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவை மாற்றி மாநில அரசுகளின் சம்மதம் இன்றி இதுபோன்ற திட்டங்களை கொண்டுவரக் கூடாது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும்.
சில முக்கிய விஷயங்களில் முதல் கட்டமாக திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ள போதிலும், மேலும் சில விஷயங்களில் இன்னும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தற்போதைய தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ள எஞ்சிய திருத்தங்களையும் செய்த பிறகே நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
English Summary: Food Security Bill
Tamilnadu CM writes another letter to PM for Food Security Bill
CHENNAI: As the UPA government gears up to seek passage of the Food Security Bill, Tamil Nadu today insisted that some of the suggestions it mooted including extending the scheme to entire urban population be included in the set of amendments proposed. “While some of the key issues have been addressed in the first set of amendments proposed, there are still some outstanding issues which would require to be addressed before the present National Food Security Bill truly assures food security to the Nation and in particular to Tamil Nadu”, Chief Minister Jayalalithaa noted in a letter addressed to the Prime Minister Manmohan Singh.
“Hence, I request you to kindly consider the remaining suggestions for amendments and ensure that our concerns are adequately addressed before the Bill is passed,” she demanded in a letter she shot off to Singh yesterday and the copies of which were released to the press here today. She pointed out that the state’s suggestion that entire urban population should be eligible for subsidised foodgrains has not been accepted and stressed “if not 100 per cent, atleast 75 per cent should be covered on par with rural population”. Jayalalithaa expressed disagreement over the discretion given to the Central government over fixation of issue price, remarking “in the event of the issue price being fixed at the economic cost of rice, it would place an additional “huge financial burden of around Rs 1000 crores on the Government of Tamil Nadu,” she said. Food Security Bill
Considering the fiscal impact on states and sensitivity of the issue in Tamil Nadu, she “strongly” urged Singh to provide a legally binding assurance that the difference in quantity between what has been assured through the newly introduced second proviso to Clause 3(1) and what is eligible under Clause 3(1) read with Clause 3(2) will be supplied to the States at the price of Rs 3 per kg or the current price applicable for Above Poverty Line families of Rs 8.30 per kg. She wanted the Centre to revisit the stipulation fixed for identification of eligible households within one year, as it was not adequate. Jayalalitha pressed for other demands like seeking an amendment making it incumbent on Centre to implement all measures including import of foodgrains when warranted, besides seeking that Clause 12 (2) (h), allowing Centre to introduce cash transfer and food coupon schemes, with a “clear indication that no such scheme may be introduced without the concurrence of the State Government.” Food Security Bill is slated to come up for discussion and passage tomorrow in Lok Sabha. Food Security Bill
Real estate Company in chennai : Best Square feet