Violence in Bolivia jail takes 30 lives
பொலிவியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். பொலிவியாவின் சான்டா குரூஸில் இருக்கிற பால்மசோலா சிறைச் சாலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. இந்த வன்முறையின் போது சிறைக்குள் இருந்த ப்ரோபோன் வாயு டேங்குகளை கைதிகள் சிலர் தீயிட்டனர். மேலும் பலரை எரித்தும் கொன்றுள்ளனர். இந்த மோதலில் 18 மாத கைக்குழந்தை உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு யார் தலைவராக இருப்பது என்ற மோதலிலேயே இந்த கலவரம் மூண்டதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொலிவியா அரசு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கள் பெற்றோருடன் சிறையில் இருக்க அனுமதி அளித்திருந்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது சிறைக் கலவரத்தில் குழந்தையும் பலியாகி இருப்பதால் பொலிவியா அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
Violence in Bolivia jail takes 30 lives
A battle among rival gangs in a prison in Bolivia’s eastern lowlands on Friday left 30 people dead, many burned to death, as witnesses said inmates used propane gas tanks as flamethrowers. Among the dead was an 18-month-old child.