ஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி

wife kills cheating husband with coffee cup in japan

wife kills cheating husband with coffee cup in japan

70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை காபிக் கோப்பையால் அடித்தேக் கொன்று விட்டார். ஜப்பானில் தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே. அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த காபிக் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார். பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில் அடித்ததால் படுகாயமடைந்த யசுவோ, உயிரிழந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் எமிகோவைக் கைது செய்தனர்.

English Summary: 

wife kills cheating husband with coffee cup in japan

A Japanese housewife battered her septuagenarian husband to death with a coffee cup after discovering he was cheating on her, reports said Monday. The 61-year-old woman allegedly attacked her partner after learning of his affair, battering him repeatedly about the face and head with the mug at their home southwest of Tokyo on Sunday afternoon, the Asahi Shimbun and other media reported. Yasuo Hirose, a 70-year-old honorary professor with Yokohama National University, was taken to hospital but later confirmed dead. “He had an affair with a woman I hate,” Emiko Hirose told police, according to the reports. “I went mad and hit him more than 10 times with a cup.” The wife has been arrested on suspicion of attempted murder, reports said. Immediate confirmation was not available.
Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai

Related posts