pak sleeper cells infiltrate into tn with 40 kg explosives
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. மேலும் இந்து இயக்க தலைவர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளானார்கள், பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாநில நிர்வாகி வெள்ளையப்பன் உள்ளிட்ட இந்து இயக்கங்களின் தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்துள்ளதால் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர். நால்வரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் தலைக்கு பல லட்சம் ரூபாய் அறிவித்துள்ளனர் போலீசார். 4 தீவிரவாதிகளையும் பிடிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய இந்த வேட்டையில் மேலப்பாளையத்தில் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த முகமது காசிம், கட்டசாகுல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையத்தில் சிக்கியவர்களிடமிருந்து 17.5 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் துணையுடன் இங்குள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் தமிழகத்தில் மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டினார்களா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட 40 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 17½ கிலோ மட்டும் சிக்கியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
pak sleeper cells infiltrate into tn with 40 kg explosives
Sources say that Pakistan backed terror suspects have been infiltrated into the state of Tamil Nadu with 40 kg explosives.