TN announces larger green houses for weavers
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கட்டப்பட உள்ள வீடுகளின் பரப்பளவை 365 சதுர அடியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில், பெரும்பாலான நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தறிகளை வைத்துத் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் 300 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் போதாது என்றும் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர குறைந்தபட்சம் 365 சதுர அடி தேவை என்று எடுத்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 365 சதுர அடியில் வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு வீடும் 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டித் தரப்படும் என்றும் இதற்கென கூடுதலாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
TN announces larger green houses for weavers
The Tamil Nadu Government has decided to construct larger houses for weavers under the State-sponsored Green House Scheme. According to an official press release, handloom weavers will get houses of 365 sq ft instead of the conventional 300 sq ft provided to beneficiaries under the scheme. The additional space is to enable weavers set up looms at home as is their traditional practice. The State Government has approved the proposal and each house is to be built at a cost of Rs 2.65 lakh with the additional cost for the 65 sq ft space estimated at Rs 50,000. The State Government had announced plans to construct 10,000 houses for handloom weavers during the current year. The decision to construct larger houses was taken at a review meeting headed by the Chief Minister J. Jayalalithaa today, the release said.