unknown disease for a thiruvarur engineering college student
தமிழ்நாட்டில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா(21). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார். இறுதியாண்டு படித்த போது கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில் 50 கிலோ எடையிருந்த நிவேதிதா 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். நிவேதிதாவின் குடும்பம் ஏழ்மையில் வாடுவதால் அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர், மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிவேதிதாவை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தனர். தகவல் அறிந்த தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோரிடம் பேசி நிவேதிதாவை சென்னைக்கு அழைத்துவர உத்தரவிட்டார். அதன்படி நிவேதிதாவை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவி நிவேதிதா முழுமையாக குணமடைய அனைத்து மருத்துவ உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
unknown disease for a thiruvarur engineering college student
Due to a unknown disease for a thiruvarur engineering college student, The total weight of the girl of 50 kgs became 25 kgs suddenly. Few NGO came forward to to help her to get admitted to the hospital. Her name is Miss.Nivethitha who is a daughter of cooli worker Mr.Rajendran. She could not even get her medical expenses through the chief minister’s Medical insurance fund.
Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial property for sale in Chennai