Severed head, hands sent as warning to Kenyan police
கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மதியம், மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள் ரத்தக்கறையுடன் ஒரு மனிதத் தலையும், இரண்டு கைகளும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன் அதில் ஒரு துண்டு பிரசுரமும் இருந்தது. அதில், ‘அடுத்த குறி கவுலுடிதான்’ என்ற எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து, அனைத்துக் காவலர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நைரோபிக்கு வெளிப்புறத்தில் இருக்கும் பண்ணை ஒன்றில், தலையில்லா உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதனுடைய தலையைக் கொலையாளிகள் பெட்டியில் அனுப்பியிருக்கலாம் என்று நைரோபியின் காவல்துறைத் தலைவர் பென்சன் கிபுல் கருத்து தெரிவித்தார்.
கென்யாவில் காவல்துறை சீர்திருத்தத்திற்கு சில பகுதிகளில் கடும் எதிர்ப்பு உள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Severed head, hands sent as warning to Kenyan police
A box with a severed human head, two hands and a death threat were sent to Kenya’s police chief, local newspaper The Standard reported Friday.
The box with the body parts, wrapped in nylon paper, was discovered outside the National Police Service Commission in the capital, Nairobi, Thursday evening.
It included a message addressed to the commission’s chair, Johnston Kavuludi, reading: “Kavuludi, you are next.”
The commissioner has been a key proponent of police reforms since the East African nation suffered post-election violence in 2007, during which many policemen were accused of human rights violations.
Police also found a headless body on Thursday in Nairobi’s Ruai neighbourhood.
The police were still trying to establish a possible link between the body and the severed head and hands on Friday, a police offer told the newspaper.