Government decides to close the petrol pumps at night
பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க இரவு 8:00 மணி முதல் காலை 8:00 மணி வரை வரை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன் படி 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிந்துரைத்துள்ளார் .
அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள் கார்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. வாகனங்களை இயக்க பயன்படும் பெட்ரோல் டீசலுக்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு தான் அன்னிய செலாவணி அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.கச்சா எண்ணெய்க்கான தொகையை அமெரிக்க டாலர் மதிப்பில் வழங்க வேண்டியிருப்பதால் அன்னிய செலாவணி அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்களை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். குறிப்பாக பெட்ரோல் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் பங்க்குகளை இரவு 8:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மூடி வைக்கும் யோசனையும் பெட்ரோலிய அமைச்சகம் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து அமைச்சர் வீரப்ப மொய்லி டில்லியில் கூறியதாவது பெட்ரோல் விற்பனையை கட்டுப்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளை மூடி வைப்பதன் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு யோசனை தான். இதை நாங்கள் செயல்படுத்த மாட்டோம். இது என்னுடைய கருத்தும் அல்ல.பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை குறித்து வரும் 16ம் தேதி முதல் 6 வார காலத்திற்கு சிக்கன வாரம் கடைபிடிக்கப்படும். இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோல் சிக்கனம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பிரசாரத்தை துவக்க உள்ளது.
English summary:
Government decides to close the petrol pumps at night
The government is considering various proposals including shutting petrol pumps in the night to taper fuel demand as it looks at ways to cut the massive oil import bill Oil Minister said today drawing a sharp reaction from BJP. There are various options and ideas that have been floated. Shutting petrol pumps during night is one of them. But we have not decided. It is just a proposal. Moily told PTI from Bangalore. His ministry plans to launch a massive fuel conservation drive from September 16 to cut fuel demand by 3 per cent and save an estimated Rs 16,000 crore or USD 2.5 billion in forex outgo. The oil import bill is being trimmed to bring down current account deficit. If the manmohan singh government has run out of ideas to tackle the economic mess, it can take suggestions from the BJP he said. Oil Secretary vivek rae said there was no plan before the ministry to order petrol pumps in cities to remain shut from 8 pm to 8 am to curb demand for petrol and diesel. The Minister said Petroleum Conservation and Research Association (PCRA) under his ministry will from September 16 launch a 6 week campaign to promote conservation of petrol, diesel and LPG. Moily had also written a detailed note to the Prime Minister Manmohan Singh on shaving off up to USD 20 billion out of the USD 144.293 billion oil import bill of 2012-13. The August 30 note does not talk of shutting petrol pumps in the night but details out conservation campaign as well as raising oil imports from Iran to cut import bill.