Argentine woman swaps 11 year old daughter for a freezer
அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனையடுத்து, அலுமினியம் கம்பெனி உரிமையாளர்களை கைது செய்து போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் அவரிடம் ஃப்ரீஸரை விற்றுவிட்டு சிறுமியை வாங்கி வந்த தம்பதியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Argentine woman swaps 11 year old daughter for a freezer
In a shocking incident, an Argentine mother allegedly sold her 11-year-old daughter in exchange for a freezer. Thirty-year-old Pabla Cesarina Monzon Aldana reportedly gave her daughter to a neighbour in exchange for the kitchen appliance and several other household items, police said. The girl, who is now in protective custody, was then forced to work alongside other kids in an illegal aluminium pan factory in Buenos Aires where she was allegedly sexually abused, ‘New York Daily News’ reported. The nerve-wracking incident came to light last week after cops raided a clandestine workshop in the Bernal neighbourhood of the Argentinian capital. Police have found five other youngsters, aged from 14 to 17, being forced to work in the shop. According to ‘Cronica’ newspaper, the girl, identified only by her initial “M” had previously been living with relatives in Paraguay. However, her mother brought her back so that she could help earn money for the family. The girl’s father had not been keeping well, and she has three other siblings. The report said that the financial strain led to the incident. The workers have been freed, and police has arrested the couple running the factory on suspicion of child labour exploitation. However, the man who allegedly “bought” the girl is still at large.