Tamil Nadu minister vaigai selvan sudden
தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் அமைச்சரவை மாற்றத்தின்போது, சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் முக்கியமானவர் வைகைசெல்வன். இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu minister vaigai selvan sudden
In a sudden move, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday sacked one of her minister Vaigai Selvan.
Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, Residential and Commercial property for sale in Chennai