Police question husband in Russian model’s death
ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் வர மனைவிதான் காரணம் என்று சந்தேகமடைந்து கணவனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37) இவர் பிரபல போட்டோ கிராபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். ஒரு முறை இந்தியாவில் மணமகள் அணியும் உடைகளை படம் பிடிக்க திமித்ரி சென்றார். அவருடன் யூலியாவும் சென்றிருந்தார். அப்போது விதவிதமான மணமகள் உடையில் யூலியாவை படம் பிடித்தார் திமித்ரி. அப்போது அவரது அழகில் மயங்கி இந்தியாவிலேயே தனது காதலை சொன்னார். அதை யூலியாவும் ஏற்று கொண்டதால் இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி யூலியா திடீரென காணாமல் போனார். பிரபலமான மாடல் அழகி மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அவரது தம்பி மைக்கேல், யூலியாவை தீவிரமாக தேடி வந்தார். இதை தொடர்ந்து அடர்ந்த காடுகள் நிறைந்த யூரல் மலை பகுதியில் யூலியாவின் சடலம் நிர்வாண நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் யூலியாவின் கழுத்து திருகப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், யூலியா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கணவர் திமித்ரியை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், யூலியா மூலம் திமித்ரிக்கு எய்ட்ஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திமித்ரி, யூலியாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மாடல் அழகி யூலியாவை மர்ம நபர்கள் யாராவது கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஆனால், அடிப்படை காரணம் இல்லாமல் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். நான் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமித்ரி தெரிவித்துள்ளார். மாடல் அழகி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Police question husband in Russian model’s death
A model whose broken, burned and naked body was found in the woods may have been killed by her husband because she gave him AIDS.
The Daily Mail in London reports this morning that the disfigured body of Yulia Loshagina was found in the Ural mountains last week and a post-mortem revealed the 28-year-old Russian was HIV positive.
Loshagina’s injuries were so severe she had to be identified by DNA.
Her photographer husband, Dmitry Loshagin, 37, was arrested and police are investigating his possible involvement.
Loshagina disappeared on August 22 after a rooftop party at their $1million penthouse.
Guests at party reported that Loshagina appeared to be distressed and had locked her husband and guests out on the roof, according to the Daily Mail.
The model’s brother Mikhail, said: “He simply didn’t bother to start looking for her. First he told us that Yulia left in the middle of the night, taking his car. Then he claimed that his car suddenly re-appeared under their window.
“I got simply fed up and went to police, claiming my sister disappeared and we suspected had something happened to her.
“He constantly changes his story. He didn’t think to call police to check the car which Yulia allegedly took for fingerprints. Why? He refuses to take a polygraph test. I think it means he’s got things to hide.”
The Daily Mail reports that when her body was found, her brother claimed Loshagin was too busy to go and identify her. Mikhail claimed that he texted: “Busy, at picture presentation right now”.
In the days after her death, Loshagin put their penthouse on the market.
He was arrested as he left on a “business trip”, police said.
The Komsomolskaya Pravda newspaper reports that he husband allegedly became furious when he learned that his wife had infected him with AIDS.
Mr Loshagin, who remains in custody, denies the accusations.
“I loved my wife,” he said.
The tragic end is a far cry from the love affair between the leading local photographer and one of the region’s most prominent models.
They fell in love on a shoot in India when he photographed her in a bridal dress – and proposed on the spot. The couple wed two years ago.
“When I saw her in a wedding dress on the back of an elephant in the Indian jungle, I went to her and proposed,” he said.