Canada issues coins for Superman’s 75th
சூப்பர்மேன் கதாபாத்திரம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளில் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் கனடா நாட்டில் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் சூப்பர்மேன் உருவம் பொறித்த7 புதிய நாணயங்களை ராயல் கனடா மின்ட் நேற்று வெளியிட்டது. சூப்பர்மேன் கதாபாத்திரமானது கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உண்மை மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு போராடும் விதமாக சூப்பர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் நாணயங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில கடந்த 1938ம் ஆண்டு வெளியான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் தி நியூ 52 என்ற காமிக்ஸ் புத்தக கதாபாத்திரத்தில் இருந்து சூப்பர்மேனின் புதிய உடையுடன் கூடிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு நாணயமும் வெளியிடப்பட்டு உள்ளது. ஷஸ்டர் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ள 14 காரட் தங்க நாணயம் 750 டாலருக்கு விற்கப்பட்டு உள்ளது. மற்ற 6 நாணயங்கள் 29.75 டாலர் முதல் 129.75 டாலர் வரை விலை கொண்டவை ஆகும். சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள ஸ்மால்வில்லி தொடர்களில் பெரும்பாலும் கனடா நாட்டை சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். லாய்ஸ் லேன் ஆக தோன்றும் எரிக்கா டியூரன்ஸ், ஜிம்மி ஆல்சன் ஆக தோன்றும் ஆரன் ஆஷ்மோர் மற்றும் லானா லேங் ஆக தோன்றும் கிறிஸ்டின் கிரியூக் ஆகியோர் கனடாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஸ்மால்வில்லி தொடர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்மேன் திரைப்படங்களில் தோன்றி நடித்துள்ள மார்கட் கிட்டர் இதுவரை 4 சூப்பர்மேன் படங்களில் லாய்ஸ் லேன் ஆக நடித்துள்ளார். மேலும், கிறிஸ்டோபர் ரீவ் என்பவரும் வட கனடாவின் எல்லோநைப் பகுதியில் பிறந்தவராவார். சூப்பர்மேன் கதாபாத்திரத்துடன் நடித்துள்ள பெரும்பான்மையான நடிகர்கள் கனடா நாட்டுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Canada issues coins for Superman’s 75th
The Royal Canadian Mint said Monday it would be issuing the collector’s items — ranging in face value from 50 cents to $75 — in gold, silver and cupro-nickel.
Prices range from Can$29.75 (US$28.7) for the cupro-nickel coin and an accompanying stamp to Can$750 for the 14-carat gold coin, which boasts a color image of Superman and is being billed as the first of its kind. Only 2,000 coins of this type will be up for grabs.
“The generations of young people who grew up reading Superman comics may not have fully appreciated the story behind them,” Immigration Minister Chris Alexander said in a statement marking the launch in Toronto.
“Our government celebrates Canada’s history and heritage and the very values and strengths that Superman embodies.”
Superman, who first appeared in 1938, was co-created by Canadian Joe Shuster and US collaborator Jerry Siegel.