100 killed in Central African Republic clash
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டு அதிபராக பிரான்காய்ஸ் போசிசீ இருந்தார். கடந்த 2013 மார்ச் மாதம் மிகேல் ஜோடோடியா, அதிபர் பிரான்காய்ஸ் போசிசீ அரசை கவிழ்த்தார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மிகேல் ஜோடோடியா இடைநிலை அரசின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இது சதி போன்று உள்ளது என கூறி கண்டனம் எழுந்து, பிரான்காய்ஸின் ஆதரவாளர்களுக்கும், மிகேலின் ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்பட்ட பயங்கர மோதல்களில் 100க்கு மேற்பட்டோர் பலியாகினர், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல்களினால் இந்நாட்டின் தலைநகர் பாங்குய்யின் வடமேற்கு பகுதியான பௌகா மற்றும் பொஸ்ஸாங்கோ உள்ளிட்ட பல பகுதிகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. முன்னால் அதிபர் பிரான்காய்ஸின் ஆதரவாளர்கள் தங்களது தலைவரை மறுபடியும் அதிபராக ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக முன்னால் அதிபர் பிரான்காய்ஸின் செய்தித் தொடர்பாளர் லெவி யகேடே கூறுகையில், திரு.பிரான்காய்ஸை மீண்டும் அதிபரக ஆக்க முன்னாள் ராணுவ வீரர்கள் தான் தாக்குதல்களை நடத்தினர். எனினும் தேர்தல் மட்டும் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும் என்றார்.
கடந்த 1960ம் ஆண்டு, பிரான்ஸிடம் இருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு சுதந்திரம் அடைந்தது. அன்றில் இருந்து இன்றுவரை அங்குள்ள அரசுகள் பல முறை கவிழ்க்கப்பட்டு வந்திருகின்றன.
100 killed in Central African Republic clash
More than 100 people were dead fighting in Central African Republic. This is between supporters of former president Francois Bozize and the forces loyal to President of Transition Michel Djotodia. Bozize was over thrown by Djotodia in March and was sworn as head of the transitional government in Aug 18 . The takeover was condemned as a coup. Citing a statement from the presidential office, the radio Wednesday said the clashes since Saturday have caused 150 or so casualties. This is including almost 100 people killed in the fighting and 50 injured. Bossangoa and Bouca are among the worst hit areas northwest of the capital Bangui. Bossangoa, the home region of Bozize, has become another hotspot since the rival forces fought in the districts seen as his strongholds in Bangui last month. While Djotodia’s Seleka fighters are trying to disarm the pro- Bozize elements, the latter seem to manoeuvre for a comeback of their leader. Levy Yakete, spokesperson for Bozize, recently said the attacks were launched by former armymen who want to bring Bozize back for the mandate as the president elected by his people. The Economic Community of Central African States has provided for a transitional period of 18 months, pending an election to end the crisis. A 1,400-strong peacekeeping mission is deployed in the troubled country, which has witnessed repeated coups since independence from France in 1960.