anil ambani income tax account hacked by a Chartered accountant lady student
அணில் அம்பானியினுடய வருமான வரி கணக்கு சட்டவிரோதமாக முடக்கிய 21 வயது சி.ஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. மும்பையில் உள்ள கணக்கு தணிக்கை நிறுவனம் ஒன்று அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் திரு.அனில் அம்பானியின் வருமான வரி கணக்கை பராமரித்து வருகிறது. கடந்த 26 ஆம் தேதி ஜூன் மாதத்தில் அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனத்துக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த இமெயிலில், அனில் அம்பானியின் வருமான வரி இணையதள கணக்கிற்கு உண்டான பாஸ்வோர்ட் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 12-ம் தேதியன்று மீண்டும் இதே போல் ஈமெயில் ஒன்று வந்தது. இதனால் பீதி அடைந்த அம்பானியின் அலுவலக அதிகாரிகள், அவரது கணக்கை ஆராய முற்பட்டபோது, அது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனால் முடக்கப்பட்ட தமது நிறுவன இன்டர்நெட் கணக்கு சம்பந்தமாக போலீசில் நிறுவன அதிகாரிகள் உடனடியா புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததில் ஐதராபாத்தில் உள்ள மனோஜ் டகா அண்ட் கம்பெனி எனும் கணக்கு தணிக்கை அலுவலகத்தில் சி.ஏ முடித்து விட்டு பயிற்சியில் இருந்த 21 வயது மாணவி தான் அனில் அம்பானியின் வருமானவரி கணக்கை முடக்கி அதில் உள்ள விபரங்களை கண்டது தெரிய வந்துள்ளது. அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில் அணில் அம்பானியின் வரி செலுத்திய விவரங்களை காண மற்றும் அவரது வருமானவரி கணக்கு எண் என்ன என்பதை தெரிந்துகொள்ளவே இந்த வருமான வரி கணக்கு முடக்கம் நிகழ்தது என அறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைபர் குற்றத்தின் கீழ், அந்த மாணவி மீது கடந்த 7ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றத்திற்காக அந்த மாணவி கைது செய்ய படலாம் என கருதபடுகிறது.