At least 16 dead in Venezuela prison clash
வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமான கைதிகள் அடைக்கப் படுவதே எனச் சொல்லப் படுகிறது. உதாரணமாக, சபானிடா சிறையில் சுமார் 4000 கைதிகள் உள்ளனர். இது, அச்சிறையின் கொள்ளளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
At least 16 dead in Venezuela prison clash
At least 16 people were killed in a clash between inmates at a Venezuelan prison, authorities and a non-governmental organization said Tuesday. Humberto Prado, director of the Venezuelan Prison Observatory, told AFP the brawl broke out Monday in the Maracaibo prison in the northwest of the country. Venezuela Prison Minister Iris Varela later confirmed the 16 fatalities. “Fifteen people were killed here, and there was one person, the 16th, who was also killed but in another area. (His death) was not part of the internal battle that was going on at the time, but also a product of violence,” Varela specified. The NGO and local news reports gave gruesome details of the state of the bodies following the confrontation, which lasted several hours. “Some of the prisoners were dismembered,” Prado said, adding some had been beheaded. The clashes were apparently caused by rival gangs vying for control of the prison, according to press reports. Venezuela’s prisons are marred by overcrowding and violence. In many cases, they are controlled by heavily armed gangs of inmates. According to the Venezuelan Prison Observatory, 591 inmates died in 34 jails across the country last year while another 1,132 were injured. That compares to 560 deaths and 1,457 injured in 2011.