வங்கதேச ஆயுள் தண்டனை கைதி மேல் முறையீட்டில் மரண தண்டனை

Abdul Kader Mullah Gets Death Penalty For War Crimes

_69890682_69887626

பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971-ம் ஆண்டு நடந்த போரில், பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் அப்துல் குவாதர் முல்லாவிற்கு மேல் முறையீட்டில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் பிப்ரவரியில், 65 வயதான அப்துல் குவாதர் முல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஒருவருக்கு கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்று முல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர், ஆனால் அவரது எதிர்ப்பாளர்களோ முன்பு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து, 48 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Abdul Kader Mullah Gets Death Penalty For War Crimes

Bangladesh’s top court has rejected the appeal of an Islamist leader against his war crimes conviction, increasing his life sentence to the death penalty. In February Abdul Kader Mullah, of the Jamaat-e-Islami party, was convicted by a special tribunal of crimes during the 1971 war of independence with Pakistan. The life sentence imposed at the time sparked angry street protests. His supporters said the charges were politically motivated but his opponents said that sentence was too lenient. Thousands staged vigils in Dhaka demanding the death penalty for Abdul Kader Mullah, who had been convicted of charges which included overseeing massacres during the bloody struggle for independence. His conviction and subsequent sentences handed down to other Islamist leaders by the tribunal over the last few months unleashed a wave of unrest on the streets pitting supporters of Jamaat, who accuse the government of pursuing a political vendetta, against pro-government groups. More than 100 people have been killed since January in these violent protests.

Related posts