Chinese woman survives 15 days in well
சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (வயது 38). இவர் கடந்த 1-ம் தேதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று, மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர்.
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ உணவு மட்டுமே சாப்பிட முடிகிறது.
மூலிகை பறிக்கச் சென்ற சூ கிஜியு, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். ஒரு மீட்டர் விட்டமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட அந்த கிணற்றின் சுவர் மிகவும் மென்மையாக இருந்ததால் அவரால் மேலே ஏற முடியவில்லை. அவர் வைத்திருந்த மக்காச் சோளத்தைச் சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் 15 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.
Chinese woman survives 15 days in well
A woman has been found 15 days after she fell into a well in central China’s Henan province, local authorities said today.
38-year-old Su Qixiu was found at the bottom of an abandoned well at Zhongfeng village in Xiayi county aound 4 pm yesterday, Xinhua reported, citing the county’s firefighting department. Su was in the well for 15 days and remained undetected. The well is about one metre in diameter and four metres deep. It is encircled by lush cornstalks and is difficult to see. The wall of the well is too smooth to climb up. Su, who was found lying on her back with eyes open, was astonishingly skinny, said Chen Kui, a firefighter who participated in the rescue. “Hungry! I’m hungry,” said a feeble voice after Chen went down the well. Chen asked her if she could move. She did not reply but extended her hands. Although Su did not have any obvious injuries, she could not speak or eat. Functioning of her internal organs has not recovered, but she is in stable condition and receiving fluids. Su survived by eating raw corn she was carrying when she fell into the well. Two rain showers during the period gave here enough water to drink, according to her husband. Su had gone out to pick herbs after lunch Sep 1 and did not come back that day. Her family began searching for her the next day but their efforts failed, her husband said.