VCK leader Thirumavalavan calls on Vijayakant
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
விஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்புஇந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.
”மரக்காணம் கலவரம் சம்பந்தமாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை, திருமாவளவன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, தேமுதிக அவை தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்தி ரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், செய்தி தொடர் பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், பாலசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
The best Real estate Company in Chennai
English Summary:
VCK leader Thirumavalavan calls on Vijayakant
Founder of Dalit outfit Viduthalai Chiruthaigal Katchi and Lok Sabha MP Thol Thirumavalavan today called on DMDK founder and Opposition Leader in Tamil Nadu Assembly Vijayakant, sparking speculations of a political realignment. However, Thirumavalavan was quick to add he met Vijayakant only to discuss about the recent violence at Marakkanam in Villupuram district, an incident which has been condemned by all political parties. As part of its efforts to mobilise political parties and democratic forces against what it describes as “the hate campaign of the Pattali Makkal Katchi (PMK),” Viduthalai Chiruthaikal Katchi (VCK) on Sunday reached out to Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), a party to which the VCK was not known to be friendly till now.