Military Invents Self-Cleaning Clothes, Take That Tide Detergent
ஆராய்ச்சி மையம் ஒன்று அமெரிக்க ராணுவத்தில் ‘‘யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட் இன்ஜினியரிங் சென்டர்’’ எனும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானி திரு.தாவுரங் என்பவர் ஒரு புதிய வகை துணியை உருவாக்கியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஆண்டுக்கு 5 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என பல இடங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்களது ஆடைகளை பணிபுரியும் இடங்களில் துவைத்து சுத்தம் செய்து கொள்ள வசதிகள் ஏதும் கிடையாது. ஆகையால் பல ராணுவ வீரர்கள் தங்களது அழுக்குக்கான உடுப்புகளோடு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கவேண்டியுள்ளது. ஆகையால் ராணுவ வீரர்களுக்கு துவைத்து சுத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லாத துணியை உருவாகினால் என்ன எனும் சிந்தனை ராணுவ ஆராய்ச்சியாளர் திரு.தாவுரங்குக்கு உண்டானது. அதனுடைய வெளிப்பாடு தான் இந்த துவக்கவேண்டிய அவசியம் இல்லா துணி.
இவர் உருவாக்கியுள்ள இந்த புதிய வகையான துணியில் ‘‘ஓம்னி போபிக் கோட்டிங்’’ எனப்படும் ஒரு வகையான இரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த இரசாயன பூச்சு பூசப்பட்ட துணியில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவ சீருடை எத்தனை நாட்கள் உடுத்தினாலும் அழுக்கு ஏதும் சேராது. மேலும் கிரீஸ் மற்றும் சேறு போன்ற பல கறைகள் பட்டு அழுக்கு ஏற்பட்டாலும், அந்த சீருடையை கழட்டி உதறினால் போதுமானது, அந்த கரை மற்றும் அழுக்கு தானாகவே போய்விடும். அது போல் உடம்பினில் உருவாகும் எந்த ஒரு மட்டமான துர்நாற்றம் ஏற்பட்டாலும் அதுவும் இந்த சீருடையை பாதிக்காது. இந்த புதிய துணியில் தைக்கப்பட்ட சீருடை அதே நறுமணத்தோடு இருக்கும்.
இந்த நாற்றம் புகாத புதிய வகை துணி குறித்து ஆராய்சியாளர் திரு.தாவுரங் கூறியது என்னெவென்றால்: போர்க்கள முனையில் இருக்கும் எங்களது ராணுவ வீரர்களுக்கு முகாமில் உள்ள அலுவலகங்களில் சீருடை மற்றும் ஏனைய துணிகளை துவைத்து சுத்தம் செய்வதற்கு துணி துவைக்கும் இயந்திர வசதிகள் இருக்கின்றன. ஆனால் நாட்டின் எல்லை புறம் மற்றும் திடீர் போரில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் சீருடை துணி துவைப்பதற்காக வழி இல்லை. இராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானதாகும். ஆகவே அவர்கள் இங்கு வந்து துணியை துவைத்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் சுத்தமான வீச்சம் எடுக்காத புதிய வகை துணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த துணி தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயன கலவையினால் உடல் நலத்துக்கு எந்த வித கேடும் வராது. இப்புதிய வகை துணியில் தைக்கப்பட்ட இராணுவ சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி எனும் பணி இடத்தில் உள்ள இராணுவ வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம். இந்த சீருடை அணிந்த இராணுவ வீரர்கள் எந்த வித பிரச்னையும் இல்லை என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதிய வகை துணியானது அணிந்து அழுக்கான பின் கழட்டி உதறினால் தன்னாலேயே அழுக்கை சுத்தம் செய்து கொள்ளும் தன்மையை கொண்டதாகும். இந்த புதிய வகை துணியில் தைக்கப்பட்ட இராணுவ சீருடை உதறி அணிந்த பின் துவைத்து சுத்தம் செய்தது போன்ற புத்துணர்வோடு காணப்படும்” என்று கூறினார்.
Military Invents Self-Cleaning Clothes, Take That Tide Detergent
The folks at Tide Detergent better watch their backs because the US Military has it out for them. Okay maybe not, but that didn’t stop Army physical scientist, Quoc Truong, from creating self-cleaning clothes that NEVER need to be washed.Truong led a team of researchers on a five-year long journey to develop the clothing. The group worked out of the U.S. Army Soldier Research, Development, and Engineering Center in Natick, Massachusetts.