CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இளைஞர் தனது பெற்றோர்கள் கண் முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர் ராகுல் (வயது 21) சி.ஏ தேர்வில் கடுமையாக முயன்று படித்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தனது பெற்றோர்கள் திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 21). சி.ஏ படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரை அவரது பெற்றோர்கள் திட்டியுள்ள்ளர்கள். இதனால் மனமுடைந்து ஆத்திரப்பட்ட அவர் வீட்டைவிட்டே வெளியேறினார். இதை தொடர்ந்து மாணவர் ராகுலின் தந்தை திரு.ராஜேஷ் பாலி அவருக்கு தொலைபேசியில் பேசி வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ராகுல் தான் தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.
உடனே அவர்கள் தங்களது மகனை காப்பாற்றுவதற்கு காசியாபாத் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கே ராகுல் தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். பெற்றோர்கள் ராகுல் அருகே போவதற்குள், அந்த வழியாக வந்த இரயில் முன் பாய்ந்து ராகுல் பலியானார். பெற்றோர்களின் கண் முன் பரிதாபமாக உயிரை இழந்த மகன் ராகுலை பார்த்த அவர்கள் கதறி துடித்தார்கள்.
காவல்துறையினர் இராகுலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இந்த தற்கொலை சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டனர்.
CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station
In Uttar Pradesh at Ghaziabad railway station, a 21 year old C.A student Rahul committed suicide in front of his parents by jumping before a train on a railway track in Kavinagar area here, a police official said on Thursday. “C.A student Rahul took this extreme step yesterday after being scolded by his parents for scoring over poor marks in his C.A exams,” they said. According to the Ghaziabad police official , Rahul’s father Mr.Rajesh Bali scolded him yesterday for not scoring good marks in the Chartered Accountancy exam.