bill gates foundation going to build toilet in india
இந்திய அரசுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மூலம் இந்தியாவில் கழிவறைகளை கட்டித் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்தியாவில் கழிவறைகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது.
உலகில் 1 பில்லியன் பேர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
அதில் இந்தியாவில் மட்டும் 638 மில்லியன் பேர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகிறார்கள். மேலும் கழிவறைகள் இல்லாமல் இருக்கும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர்.
ஏழை மக்கள் கழிவறையை கட்ட செலவாகும் பணத்தை உணவு வாங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
எனவே இந்திய அரசுடன் சேர்ந்து பில் கேட்ஸ் கழிவறை கட்டி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.