டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏ.டி.எம் மையங்களை காதல் வளர்க்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த காணொளி இணையதளத்தில் வெளியானது. சிசிடிவி காணொளியை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதனைத் தொடந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது.
தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏ.டி.எம். மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும் ஜோடிகளுக்கு இக்காட்சிகள் பொலிசாரின் கண்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களின் பார்வைக்கும் சென்றடைகிறது என்ற அச்சத்தை உண்டாக்கி மேற்கொண்டு இது போன்ற அசிங்கங்களைத் தவிர்ப்பதற்காகவே இக்காட்சிகளை வெளியிட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் காவல் துறையினர் வெளியிட்ட இக்காட்சிகள் குறிப்பிட்ட ஏ.டி.எம்களில் மட்டும் எடுக்கப்பட்டவை இல்லை என்பது தான் அதிர்ச்சிகரமான செய்தி. டெல்லியின் பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
சில இடங்களில் ஏ.டி.எம் மைய காவலர்களே இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாம்.
காசை வாங்கிக் கொண்டு ஏ.டி.எம்மின் வெளியே ‘அவுட் ஆப் ஆர்டர்’ போர்டை மாட்டி விட்டு காதலர்களை உள்ளே அனுப்பி விட்டு காவலுக்கு இருக்கிறார்களாம் சில வாட்ச்மேன்கள்.
இது போன்று பொது இடங்களைக் காதல் வளார்க்கப் பயன்படுத்தி அநாகரீகமாக செயல்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.