human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life.
ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு
90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர் வாழ்தல் சம்பந்தமான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான ஆய்வு ஒன்று மேற்கொண்டு வருகிறது. அதில், நீண்ட நாள் உயிர் வாழ பணம் போதுமானது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்திருக்கிறது என்னவென்றால் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் முதியோர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்களை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், ஏழைகள் பல பேர் தங்களது 90 வயதையும் தாண்டி வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
1950ல் இருந்து 2008ம் ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவிகிதம் 0.45% (70-74 வயது) அதிகரித்து இருந்தது தெரியவந்தது. இதேபோல, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதே வயதினரின் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன. வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இது தொடர்பான ஆராய்ச்சி நீடிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.