வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says

நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு  சூப்பர் ஹீரோ என்கிறார் பாலிவுட் ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட் முன்னணி நாயகர்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி. இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார்.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். 1986ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர் எனக்கு வழிகாட்டியைப் போன்றவர். மேலும் ஒரு உதாரண புருஷராக நின்று எனக்கு பல விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறார்.

நிஜ வாழ்க்கையிலும் அவரே ஹீரோ என்றும் என் தந்தைக்கு நிகராக நான் மதிக்கும் ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெரிய பெருமை எனவும் கூறியுள்ளார் ஹ்ரித்திக்.

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says

rajni-hritik

actor rajinikanth is a real life superstar Says Bollywood actor hirithik

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says

Related posts