planned to assassinate 10 hindu leaders a year : Police Bakrudeen
ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் சுமார் 10 பேரை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டினோம். ஆனால் 5 பேரை மட்டுமே கொல்ல முடிந்தது என்று பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வெள்ளையப்பன், மதுரை சுரேஷ், ஆடிட்டர் ரமேஷ் உள்பட இந்து தலைவர்கள் படுகொலை தொடர்பாக தேடப்பட்ட போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான்.
ஆந்திர மாநிலம் உள்ள புத்தூரில் தலைமறைவாக இருந்த அவனது கூட்டாளி பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை மிக நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தார்கள். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்த பன்னா இஸ்மாயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் வேலூரில் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். அக்டோபர் 2012ல் அரவிந்தரெட்டி தொடங்கி 10 மாதத்தில் 5 பேரை கொன்றோம் என்றும் ஒரே ஆண்டில் குறைந்தது 10 பேரை கொல்லத் திட்டமிட்டோம் ஆனால் 5 பேரை மட்டுமே கொலை செய்தோம் என்று இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மதுரை சுரேஷ், வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட 5 பேரை நாங்கள்தான் கொன்றோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலைகளை செய்துவிட்டு போலி நபரை பொலிசில் சிக்க வைத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் வேலூர் அரவிந்த ரெட்டி, பரமக்குடி முருகன் கொலையில் போலி நபர் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
பொலிஸ் விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.