American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகில் தனியார் போர்க் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது என பரபரப்பான செய்திகள் வெளியாகிஇருக்கிறது. தூத்துக்குடி அருகே கடலில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றார்கள். அப்பொழுது ஒரு மர்ம கப்பல் நடுக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே அந்த தனியார் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.
தனியார் போர் கப்பல் என்பதால் பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகளும் தூத்துக்குடி நகரில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அங்கே இருந்து இந்திய கடற்பரப்புக்குள் அக்கப்பல் ஊடுருவிஇருக்கிறதா??. அல்லது சீன வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பு கருதி அங்கு வந்ததா? என்றும் அந்த போர் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அது உண்மையில் அமெரிக்க தனியார் போர்க்கப்பல் என தெரியவந்தது . மேலும் அந்த போர் கப்பல் சோதனையிடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி ஆனந்தகுமார் பேசுகையில், கப்பல் பிடிபட்டது உண்மை தான். எனினும், அது வியாபாரக் கப்பலோ, மீன் பிடி கப்பலோ அல்ல. அது போர்க் கப்பல் என தெரிய வந்துள்ளது. எனவே தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, மேற்கொண்டு எந்த தகவலையும் இப்போதைக்குக் கூற முடியாது என்றார்.
English summary:
American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel