India home to a quarter of the world’s hungry
உலகத்தில் பசியில் வாடும் மக்கள் தொகையில் கால்வாசி பேர் இந்திய நாட்டில் வாழ்வதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெள்யீடு செய்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடபட்டிருக்கிறது. 2011-2013 ஆண்டுகளில் உலகத்தில் 842 மில்லியன் மக்கள் பசியினால் வடிகொண்டு இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2010-2012ம் ஆண்டோடு (சுமார் 870 மில்லியன்) இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது சற்று குறைவு தான். 120 நாடுகளை சேர்ந்த மக்களை கணக்கில் எடுத்து அதில் எவ்வளவு மக்கள் பசியால் வாடுகின்றனர் என கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த 2006-ல் இருந்து ஊட்டச்சத்து குறையுள்ள மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் எடை மிக குறைவாக இருப்போர், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் பலியானவர்களின் விகிதத்தை கொண்டே பசியினால் வாடுபவர்களின் எண்ணிக்கை கணிக்கிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சத்து மிகுந்த உணவை உண்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின் மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் விகிதம் சுமார் 21%-ல் இருந்து 17.5% மாக குறைந்திருக்கிறது. உடலின் எடை மிக குறைந்த குழந்தைகளின் விகிதமும் 43.5%த்தில் இருந்து 40%மாக குறைந்திருக்கிறது. மேலும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பலியாகும் விகிதமும் 7.5%த்தில் இருந்து 6%மாக குறைந்திருக்கிறது. இந்த தகவலை கணக்கில் கொண்டு காண்கையில் 2003-2007 மற்றும் 2008-2012ம் ஆண்டுகளில் இந்திய நாட்டில் பசியினால் வாடியவர்களின் 24%ல் இருந்து 21% மாக குறைந்துள்ளது.
உலக நாடுகளில் பசியினால் வாடுபவர்களின் எண்ணிக்கை சூடான், இந்தியா, எதியோபியா, சாட், காங்கோ, நைஜர் மற்றும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளில் கூடுதலாக இருக்கிறது. உலகத்தில் 842 மில்லியன் மக்கள் பசியினால் துன்பபடுகிறர்கள். அவர்களில் கால்வாசி மக்கள் அதாவது 210 மில்லியன் மக்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகசச்சந்தையினில் கடந்த ஆண்டு கோதுமையின் விலை 16%மும், அரிசியின் விலை 23%மும், சோளத்தின் விலை 35 %மும் குறைந்திருக்கிறது. தானியங்கள் உற்பத்தி கூடுதலாகவும், விலை குறைந்தும் பசியினால் வாடுபவர்களுக்கு மட்டும் உணவு என் கிடைக்கவில்லை.
India home to a quarter of the world’s hungry
as per Global Hunger Index report, India is the home to quarter of the world’s hungry.