Army chief General Bikram Singh briefed the Cabinet committee
புதுடெல்லி 01 மே 2013: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லைப்பகுதி நிலவரம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், தற்போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி பிக்ரம் சிங் கலந்து கொண்டார். சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
Army chief General Bikram Singh briefed the Cabinet committee
English Summary: In Delhi, Army chief General Bikram Singh briefed the Cabinet committee on security chaired by Prime Minister Manmohan Singh during which he listed various options before the government including using the military aggressively to resolve the issue.
Property Buying and selling in Chennai by best square feet.