Mothers selling breast milk on Facebook: Report
தற்சமயம் பிரிட்டன் மட்டும் அமெரிக்க நாடுகளில் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை, மற்றும் நீண்ட தலைமுடி (உரோமம்), ஆகியன விற்பனை பிரமாதமாக நடக்கிறது. சமூக வளையதலமான பேஸ்புக் போன்ற இணையதளம் வழியாக தான் ஏராளமானோர் இவற்றை பேரம் பேசி நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்களுடைய பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். குறிப்பாக கரு முட்டை விற்பனை செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 யும் விலை கூறபடுகிறது. தாய்பால் ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பல காலமாக ‘தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு கட்டாயம் தேவை’ என்று மருத்துவர்கள் கூறுவதால் இதனுடைய அவசியம் பற்றி இளம் தாய்மார்கள் தற்சமயம் அதிகமாக உணர்ந்திருக்கின்றனர். எனினும் பல தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு பால் சுரக்கததால் பவுடர் பாலை கலந்து குழந்தைக்கு ஊட்டுகிறார்கள். இதனிடையே, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா, போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் தங்களுக்கு அதிகமாக சுரக்கும் பாலை, “முக நூல்” (பேஸ் புக்) போன்ற சமூக வலைதளங்களில் அறிவித்து விற்பனை செய்கிறார்கள். தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்களும், இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைகிறார்கள். இந்த புதிய வியாபார நடைமுறைக்கு வரவேற்பு கூடுதலாகியுள்ளதால் பல தாய்ப்பால் சேகரிப்பு மையங்கள் உருவாக்க பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில நாடுகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம் மூல்மாக தாய்ப்பால் விற்பனை செய்ய கடுமையான எதிர்ப்பு வந்ததால் இது போன்ற சிறப்பு வியாபார பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது. எனினும், பலரும் தங்கள் பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொட்ர்கின்றனர்.
அதே வேளையில் ‘ தாய்பால் விற்பனை செய்யும் பெண்களின் பின்னணி தெரியாமல் பெறப்படும் தாய்ப்பால் குழந்தைக்கு அறியபடாத பல பாதிப்பை உண்டாகும்’ என்று ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி மருத்துவர்கள் “தாய்ப்பாலை விற்கும் பெண் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சக்திவாய்ந்த மருந்துகளை உட்கொண்டிருக்கலாம். இது போன்ற நோய்வாய்ப்பட்டுள்ள பெண்களிடமிருந்து பெறப்படும் தாய்பால், குழந்தைக்கு கணிக்கமுடியாத பல பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி 6 மாத குழந்தைக்கும் 1 வயது குழந்தைக்கும், சத்து வெவ்வேறு வகையிலும் அளவிலும் தேவைகள் வேறுபாடும். ஆகவே தாய்ப்பாலை மற்ற பெண்களிடம் இருந்து வாங்குவது மிகவும் ஆபத்தான செயல். தாய்ப்பால் குறைவாக சுரக்கும் ஓர் சுத்தமாக சுரக்காத தாய்மார்கள் அதற்கு பதில் பவுடர் பாலையே தங்களுடைய குழந்தைக்கு கொடுக்கலாம். இது முற்றிலும் சுகாதாரமானது என தெரிவித்தனர்…
Mothers selling breast milk on Facebook: Report
Women in united states and Britain are selling their breast milk online through social networking site like Facebook, despite serious concerns that it could be harmful for babies, a media report said.