கதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்

Japanese PM eats seafood caught off Fukushima

 Japanese PM eats seafood caught off Fukushima

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பேரலை தாக்குதலும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் புகுஷிமா அணு மின் நிலைய அணு உலைகள் சிர்குலைந்து வெடித்தது. அந்த விபத்தில்  கதிர்வீச்சு கசிந்து சுற்று சூழல் பதிப்புக்கு உள்ளானது. இதில் குடிநீர், பால்,  மற்றும் உணவு பொருட்களில் அந்த அணுகதிர் பரவியது. ஆகவே, அந்த விபத்து நடந்த பகுதிகளை சுற்றி வாழ்ந்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்க்கு பின் நிபுணர்களை உதவியோடு அந்த கதிர்வீச்சு கசிவை கட்டுபடுத்தி வெளியாகாமல் சீர் செய்யப்பட்டது.

மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அது குறித்த வதந்தியும் பெருமளவில் பரவியுள்ளது. எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர்.

பொதுமக்களின் அச்சத்தை போக்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்த பிரதமர் ஜின்ஜோஅபே முடிவு செய்தார். அதற்காக அணு உலை வெடித்த புகுஷிமா பகுதியில் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். புகுஷிமா அருகேயுள்ள சோமா நகருக்கு சென்ற அவர் ஆக்டோபஸ் உள்ளிட்ட பல மீன் உணவு வகைகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டு காட்டினார்.

புகுஷிமா பகுதியில் உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகள் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என பிரசாரம் செய்தார் அதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மீன்களை வாங்கி சென்றனர்.

Japanese PM eats seafood caught off Fukushima

 

Related posts