Rajasthan minister Babu lal nagar of congress goverment arrested over rape charge on a 35 Year old women who approached him to get a Government Job
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பால்வளம் மற்றும் கதர்துறை அமைச்சராக இருந்த திரு.பாபுலால் நாகர் ஒரு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் (வற்புறுத்தலின் பேரில்). பின்னர் பாபுலால் நாகரை காங்கிரஸ் கட்சியும் விலக்கி வைத்திருந்தது.
53 வயதாகும் அமைச்சர் திரு.பாபுலால் நாகர், தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக 35 வயது பெண்மணி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த மத்தியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். அதற்கு பின்னர் தடயவியல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் திரு.பாபுலால் நாகரை மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள் .