coimbatore collector Archana Patnaik ordered by High court Judges to appear in court regarding illegal Lodge building case in Nilgiri
கோவை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 29-ஆம் தேதி அவர், நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் திரு.பி.கண்ணபிரான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்ளிட்ட ஓர் பகுதியில் தேவாராஜ் என்பவர் தனியார் தாங்கும் விடுதி ஒன்றை கட்டுகிறார். அந்த கட்டிடத்தை கட்ட தடைவிதிக்க கோரி அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சணா பட்நாயக் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அர்ச்சணா பட்நாயக் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொட்டபெட்டா பஞ்சாயத்து பகுதியில் கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கி இருக்கின்றனர். அனுமதிவழங்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி, அந்த கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த நோட்டீஸ் அனுப்புவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நீதிமன்ற உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் நடைமுறை படுத்தவில்லை என்று கூறி சமுக ஆர்வலர் பி.கண்ணபிரான் கடந்த 2012-ஆம் ஆண்டு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார். மேலும், அந்த தங்கும் விடுதியை அதன் உரிமையாளர் முழுமையாகக் கட்டிமுடித்துவிட்டார் என்றும், அதன் அருகே மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்றும் இதில் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியவர்கள் அடங்கிய அமர்வின் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, தற்போது கோவை மாவட்ட கலெக்டராக இருக்கும் அர்ச்சணா பட்நாயக் அக்டோபர் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.