wal-mart entered to retail business in india with the partnership of Bharti Enterprises Ltdஉலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையில் இருக்கும் வால்மார்ட் , தற்போது பாரதி நிறுவனத்துடன் சேர்ந்து சில்லரை வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த உள்நாட்டு நிறுவனத்துடனும் கூட்டு சேராமல் தனியாக சில்லரை வர்த்தகத்தில் ஈடு படலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் இவ்வனுமதியை பெறுவதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக, அமெரிக்க செனட் சபைக்கு வால்மார்ட் நிறுவனம் அளித்த காலாண்டு அறிக்கையில் கூறியிருந்தது.
இந்த செய்தி இந்தியாவில் மாபெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. விரைவில் விசாரணைக்குழுவின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சர்ச்சைகளுக்கு இடையில், வால்மார்ட் நிறுவனம் தனது லாபியை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் திரும்பவும் லாபியை ஆரம்பித்து உள்ளதாகவும், இதற்கென 15 லட்சம் அமெரிக்க டாலர் செலவு செய்ததாகவும் செனட் சபைக்கு கொடுக்க பட்ட காலாண்டு அறிக்கையில் கூறியுள்ளது. சில்லரை வர்த்தகம் தொடர்பாக இந்தியாவில் 50 சிக்கல்கள் பற்றி இந்த லாபியை தொடங்கி உள்ளதாகவும் வால்மார்ட் நிறுவனம் கூறியுள்ளது.