Tv News readers Fathima babu and Nirmala periyasamy joined AIADMK party , party chief J.Jayalalitha announced them as party speakers
திங்கள்கிழமை சென்னையில் நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கட்சியில் சேர்ந்தனர்.
இது பற்றி, அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வெளியிட பட்ட அறிவிப்பில்,
திருச்சி-2 தொகுதியினுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சௌந்தரராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் நகர மன்றத் தலைவரான ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவரான திரு.கா.கோவிந்தராஜ பெருமாள், செய்தி வாசிப்பாளர் திருமதி.பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.நிர்மலா பெரியசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள்.
புதியவர்களுக்கு பொறுப்புகள்: நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியவர்கள் அ.இ.அ.தி.மு.க வின் தலைமைக் கழக பேச்சாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான டாக்டர் செல்வி ஜெயலலிதா வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பில் கூறியுள்ளார்.