Paramakudi police firing : The Report of Justice Sampath Commission regarding Paramakudi Police firing submitted in Tamilnadu assembly. About 7 people were killed in police firing in 2011
பரமக்குடியில் கடந்த 2011-ம் ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதியன்று நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதியரசர் சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், பரமக்குடியில் நடந்த அந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல்துறையினரையும் பொதுமக்களையும் காப்பாற்ற எண்ணி நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்காமல் போனதால், துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறபிக்கபட்டது எனவும், அப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல் இருந்திருந்தால் தென் மாவட்டம் முழுவதும், மிக பெரிய அளவில் வன்முறை பரவி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வன்முறையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச்சூடு அத்தியாவசியமாக இருந்தது என்று விசாரணை ஆணையம் கருதுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : கடந்த 2011-ல் பரமக்குடியில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.