Ex MLA pushed out from the government bus near pudukkottai
ஆலங்குடி: பேருந்தில் இலவசமாக செல்ல பஸ் பாஸை ஏற்க மறுத்து பயணசீட்டு வங்கசொல்லி தகராறு செய்து பேருந்திலிருந்து வலுகட்டாயமாக தள்ளிவிட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் படுகாயமுற்றார்.
இதனால் அத்திரம் அடைந்த அவருடைய கிராம மக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு கிராமத்து வீட்டுக்குள் பூட்டி சிறை பிடித்தால் பரபரப்பு உண்டானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதியில் 2006-ம் ஆண்டில் இருந்து 2011-ம் அண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் திரு.ராஜசேகரன்.
நேற்று முன்தினம் திரு.ராஜசேகரன், அறந்தாங்கியிலிருந்து குளமங்கலம் பயணமாவதற்கு அரசு பேருந்தில் ஏறினார். திரு.ராஜசேகரனிடம் தேவகோட்டையை சேர்ந்த நடத்துனர் முனுசாமி(வயது 37) பயண சீட்டு வாங்கும் படி கூறினார். அதற்கு தன ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்றும் தன்னிடம் இலவசம் செல்ல முன்னாள் எம்.எல்.ஏ வுக்கு உண்டான பாஸ் இருப்பதாகவும் கூறிஇருக்கிறார். அந்த பாஸை எடுத்து நடத்துனரிடம் கொடுத்திருக்கிறார். அந்த பாஸை வாங்கி பார்த்த நடத்துனர் முனுசாமி அதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜசேகரனிடம் திருப்பி கொடுத்துவிட்டு மீண்டும் டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கழுதை பிடித்து வலுகட்டாயமாக ஓட்டுனர் மலைராஜனுடன் சேர்ந்து நடத்துனர் முனுசாமி வெளியே தள்ளி விட்டார். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் பேருந்து புறப்பட்டு சென்றது. கை, கால்களில் காயமடைந்த திரு.ராஜசேகரன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி பரவியதால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் மற்றும் திரு.ராஜசேகரனின் உறவினர்கள் இரவு 10 மணியளவில் பனங்குளம் பாலம் அருகில் பேருந்து வருகைக்காக காத்திருந்தார்கள். பட்டுக்கோட்டையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த அந்த பேருந்தை வழி மறித்து போராட்டம் நடத்தினார்கள். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் தாக்கி அங்கு இருக்கும் ஓர் வீட்டுக்கு கொண்டு சென்று பூட்டி வைத்தார்கள்.
இந்த தகவல் அறிந்த கீரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்தஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அறந்தாங்கி போக்குவரத்துக்கழக டெப்போ கிளை மேலாளர் பாலசுப்ரமணியன், ராஜசேகரனை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் பாலசுப்ரமணியம் கூறுகையில், நடத்துனர் முனுசாமி, ஓட்டுனர் மலைராஜன் சிகிச்சை பெற்று திரும்பி வந்ததும் தகுந்த விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது பற்றி, திரு.ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Ex MLA pushed out from the government bus near pudukkottai
Ex communist MLA Mr.Rajashekaran of Alangudi kanstitution was pushed out from the government bus near pudukkottai by Driver and conductor