Election commission ordered to fix None of the Above’ (NOTA) button in the Electronic Voting Machine (EVM), any voter can exercise the option of negative voting and reject all candidates as unworthy of being elected.
தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாத வாக்காளர்கள், அவரது விருப்பமின்மையை பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் ஒன்றை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு வழயாக அதை பதிவு செய்ய எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) எனும் பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்த்து கொள்ளும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த மாதம் மற்றும் டிசெம்பர் மாதத்திலும் நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென தனி சின்னம் ஒன்றை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த திட்டத்தின் படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்தரத்தில் கடைசி வேட்ப்பாளருடைய பெயருக்கு கீழ், செவ்வக வடிவ கட்டத்தில் ‘ழிளிஜிகி’ எனும் வாசகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாத வாக்காளர்கள், இந்த புதிய பட்டனை தட்டினால் அவர்களுடைய விருப்பம் பதிவாகும். அதேபோல, வாக்குசீட்டுகளிலும் இது அச்சடிக்கப்டும். இதை உடனே அமல்படுத்தும்படி எல்லா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.