Tamilnadu Government small bus with ADMK Two leaves Symbol to be erased : M.K Stalin
சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது என்னெவென்றால் : –
முதல்-அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்ற்று கொண்ட பின், அவரது அதிமுக கட்சியின் விளம்பரப்படுத்துவதற்காக ‘இரட்டை இலை‘ சின்னத்தை சிறிய பேருந்தில் பொறித்து அரசாங்க பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதன் நுழைவு வாயிலில் இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.