Saudi Arabia authorities beheaded a Pakistani smuggler on wednesday
சவுதிஅரேபியாவில் ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தல் செய்த குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானிய கடத்தல் காரனின் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அரபு நாடான சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் ஏந்திய கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவைகள் கடுமையான குற்றங்களாக கருதப்பட்டு வருகிறது.
இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர்களை மரணதண்டனை குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானிய கடத்தல் காரன் ஒருவன் ஏராளமான ஹெராயின் எனும் போதைப்பொருளை சவுதிக்கு கடத்தி வந்த குற்றத்திற்காக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதிஅராபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கடத்தல் காரனுக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலமாக இந்த ஆண்டில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary :