Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft
ஒன்றரை வருடத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞன் தனது பெற்றோர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தார்கள். 20 வயதுடைய கெவினுக்கு உடலில் உண்டான ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் கனமாகி சுமார் 500 பவுண்டு எடையோடு இருந்தார்.
இந்த காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா வந்த கெவின் மேயோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை முடிவுக்கு வந்த பின் அவர்கள் தங்கள் நாடான பிரான்சிற்கு திரும்பிச் செல்ல மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். எனினும் விமான நிலையத்திற்கு பயணத்தேதியன்று வந்த கெவின் மற்றும் அவரது மருத்துவ பரிந்துரைகளை பரிசோதித்து பார்த்த விமான நிறுவன அதிகாரிகள் தங்கள் விமானத்தில் அவரை அழைத்து செல்ல மறுத்துவிட்டனர்.
எந்த நேரமும் கெவினுக்கு மருத்துவ உதவி மற்றும் பிராணவாயுக் கருவிகள் தேவைப்பட்டது. இந்த காரணத்தால் அவர்கள் பயணிக்கும் போது ஏதேனும் சிக்கல் உண்டானால் அதை சமாளிக்க முடியாது என கணித்து தீர்மானித்து விமான நிறுவன அதிகாரிகள் அவரது பயணத்தை தடுத்து நிறுத்தி மறுத்து விட்டது. வேறு வகையான பயண முறை ஏதேனும் இருந்தால் அதை அவர்கள் மேற்கொள்ளுமாறு கூறி பிரிட்டிஷ் விமான நிறுவனம் தற்காலிகமாகத் தாங்கும் வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்தது.
பின்னர் ஒரு வார காலம் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பத்தார் அதற்குமேல் செலவு செய்ய முடியாமல் ரெயில் மூலமாக நியூயார்க் நகரம் சென்று அங்கே இருந்து கப்பலில் பிரான்ஸ் நாட்டிற்கு போக முடிவெடுத்துள்ளார்கள். அமெரிக்க வரும் போது கெவினை அனுமதித்து அழைத்து வந்த பிரிட்டிஷ் விமான நிறுவனத்தினர் மறுபடி திரும்ப போகும் போது மட்டும் மறுப்பது ஏன் என்பது குறித்து அவரது தாயார் அந்த நாட்டுத்தொலைக்காட்சியிலும் முறையிட்டுள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் நாட்டுத் தூதரகமும் வாதாடிப்பார்த்தது. எனினும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த மருத்துவ உதவியில் இருக்கும் பயணியை அழைத்துச் செல்ல பிடிவாதமாக பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துவிட்டது.
Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft
A French family who came to the United States of america for medical treatment said that they were stranded in Chicago after British Airways determined their son was too fat to fly. Kevin Chenais, 22, spent a year and a half at the Mayo Clinic for treatment of a hormone disorder which led him to weigh 500 pounds. His mother was near tears as she described the family’s problems to the local CBS affiliate. “We blame British Airways because now they just leave us, and they brought us here,” Christina Chenais told the station. “If they could bring him here with that problem in economy, there was a way to take him back by economy but just get him back home for his medical treatments to continue.” The family spent a week in an airport hotel trying to resolve the matter and, running out of money, has decided their only option is to take a train to New York and get back to France on the Queen Mary cruise ship. Kevin Chenais requires round-the-clock oxygen and medical attention. “I’m sure a lot of big people like me or bigger cannot travel because they have the same problem,” he told the station, head hanging down as he sat up in bed. “This time before leaving I knew something would go wrong.” A British Airways spokesperson told CBS that its customer service team “worked diligently to find a solution.”
“Unfortunately, it is not possible to safely accommodate the customer on any of our aircraft,” the spokesperson said in a statement. The Chenais family did not immediately return a request for comment.