Lady Gaga plans real time live pop music in 2015 at space
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவர்ச்சிப்பாப் பாடகியான லேடி க்ஹக. ‘லேடி க்ஹக’ பல நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் உலக வரலாற்றில் முதன் முறையாக ‘லேடி க்ஹக’ விண்வெளியில் இசையமைத்து பாடல் பாடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார்.
மைகேல் ஜாக்சனுக்கு பின் உலக பாப் நிகழ்சிகளில் ‘லேடி க்ஹக’ மேடையேறினால் ஒட்டு மொத்த கூட்டத்தையும் எழுந்து துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ரம்மியமாக ஆடிக்கொண்டே பாடும் வசீகர பாடகி.
Lady Gaga plans real time live pop music in 2015 at space
‘லேடி க்ஹக’ வின் பாப் பாடல் ஆல்பங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இவர் பாப் இசைத்துறையில் பல விருதுகளை வாங்கியுள்ளார். ‘பேட் ரொமான்ஸ்’ மற்றும் ‘த ஃபேம் மான்ஸ்டர்’ ஆகிய பாப் பாடல் ஆல்பங்களுக்காக 3 கிராமி விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. பல புதுமையான பாடல்கள் எழுதுவது, பாடல் ஆல்பம் தயாரித்தல், மற்றும் இசை சம்பந்தப்பட்ட பல விதமான வியாபாரங்கள் ஆகியவற்றையும் சிறந்த முறையில் செய்து வருகிறார்.
இந்நிலையில் உலக வரலாற்றில் முதன்முறையாக விண்வெளியில் ‘லேடி க்ஹக’ பாப் பாடல் பாடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் 2015–ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து கோடீஸ்வரர் ‘ரிச்சர்டு பிரான்சன்’ என்பவர் லேடி க்ஹக வை விண்வெளிக்கு ராக்கெட்டில் சுற்றுலா அழைத்து செல்ல இருக்கிறார். அதில் பங்கேற்று விண்வெளியில் பாப் பாடல் இசை நிகழ்ச்சி நடத்தி அதில் பாடுகிறார். அதற்கென சுமார் ஒரு மாத காலம் விண்வெளியில் பாடும் சிறப்பு பயிற்சி எடுத்துவருகிறார். இந்த தகவல் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபல பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.