Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old). kidney transplantation successfully done in mumbai
மும்பையில் ஒரு மாமியார் தனது இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தந்து பிரமிக்க வைத்திருக்கிறார்.
மும்பையையில் வாழ்ந்து வரும் வைஷாலி ஷா(வயது 35) கடுமையான காய்ச்சல் காரணமாக அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இயங்கமுடியாமல் பழுதடைந்தது. ஆகையால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old). kidney transplantation successfully done in mumbai
வைஷாலி ஷாவின் கணவருடைய சிறுநீரகம் பொருந்தததால் வைஷாலியின் மாமியார் சுரேகா ஷா(வயது 59) தன்னுடைய சிறுநீரகத்தை தன் மருமகளுக்கு தானமாக கொடுக்க விருப்பபட்டு முன் வந்தார். இதைத்தொடர்ந்து சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சுரேகா ஷாவை பரிசோதித்து பார்த்தார்கள். அவருடைய சிறுநீரகம், வைஷாலிக்கு கச்சிதமாக பொருந்தும் என்று அறியபட்டதையடுத்து கடந்த மாதம் இறுதியில் மும்பையில் ஒரு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் வைஷாலிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டு பொருத்தப்பட்டது.
மருமகளும், மாமியாரும் சிகிச்சை முடிந்த பின் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்ததற்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இது பற்றி வைஷாலி பேசுகையில், எனக்கு சிறுநீரகம் கொடுத்த என் மாமியாரை தெய்வமாக மட்டும் தான் பார்க்கிறேன் எனவும் அவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி கடமைபட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old). kidney transplantation successfully done in mumbai
மேலும் இது பற்றி அவருடைய மாமியார் பேசுகையில் , எனது சிறுநீரகம் என் மருமகளுக்கு பொருத்தமாக இருந்ததற்கும் அதனால் எனது மருமகளுக்கு புது வாழ்க்கை கிடைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,மேலும் அவர் கூறியதாவது, மனிதர்கள் அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பிறரை பிழைக்க செய்து புது வாழ்வு தர தயங்க கூடாது, மனித உயிர்களை காப்பாற்ற முடிந்தவரை அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.