Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பங்களா காவலாளிகள் பலபேரை கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சைக்கோ கொலையாளி மீண்டும் அந்த கொடூர வேலையை ஆரம்பித்துள்ளானா என்று அச்சம் எழுந்துள்ளது.
சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிகொண்டிருந்த கொத்தனாரின் தலையில் பெரிய கல் ஒற்றை போட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை அந்த ‘சைக்கோ’ மனிதனின் வேலையா என்பது குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai
கொத்தனார் மணி (வயது 60), இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவர் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலையை செய்து வந்தார். கொத்தனார் மணி பெரும்பாலும் தனது வீட்டில் உறங்காமல் அவரது வீட்டுக்கு எதிரில் இருக்கும் காளியம்மன் கோவில் அருகில் அல்லது அங்குள்ள நடை பாதையில் தான் படுத்து உறங்குவார்.
எப்போதும் போல் நேற்று முன்தின இரவில் நடைபாதையில் படுத்து உறங்கிவிட்டார். நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், கொத்தனார் மணி தலை பகுதியில் பலத்த காயத்தோடு ரத்த வெள்ளத்த்தில் கிடந்தார்.
அவருடைய தலையில் யாரோ ஒருவர் கல்லை போட்டு தாக்கியது தெரிய வந்தது. உடனடியாக அவசர தொலை பேசி எண் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொத்தனார் மணியை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே கொத்தனார் மணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து வெகு நேரம் ஆகி விட்டதாக கூறினார்கள்.
இது பற்றி விருகம்பாக்கம் காவல் நிலையத்தை சார்ந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் இருக்கும் பிரபு (வயது 26), கணேஷ் (வயது 23) மற்றும் அதிகாலை தினசரி செய்தி தாள் போடும் சில பேரிடம் விசாரணை செய்தனர்.
Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai
சில ஆண்டுகளுக்கு முன வடபழனி, குமரன் நகர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஆகிய பகுதிகளில் மனநலம் பாதிப்படைந்த (சைக்கோ) ஒருவர் சாலையோரம் படுத்து உறங்கிய 3 நபர்கள் மீது கல்லை போட்டு கொன்றான். இதில் சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பிழைத்தனர்.
அதே போல் விருகம்பாக்கம் பகுதியினில் மனநலம் பாதிக்கப்பட்ட எவரேனும் இது போன்ற செயலை செய்தார்களா?. அல்லது மணியின் மேல் முன் விரோதம் கொண்டு கொலை செய்தார்களா? என்று பல வித கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.