human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE
கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து விட்டார். இலங்கையில் மனித உரி்மை மீறல் அதிகமாக நடந்து வருவதாக கூறி அவர்கள் புறக்கணித்துள்ளனர். அதே வேளையில், தனது நாட்டு வெளியுறவு அமைச்சரை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
English summary: The action Ignoring the srilankan common wealth summit by indian Prime Minister Manmohan Singh and other counterparts from Mauritius and Canada has cast a shadow over the 3-day CHOGM summit that begins here tomorrow amid allegations of human rights violations against the native srilankan Tamil people in war against the LTTE. Unfazed by repeated references to the “war crimes” and the demand for an independent investigation into them, Sri Lankan President Mahinda Rajapaksa has picked on the opportunity to host the summit of the 53-nation grouping to showcase the peace in the last four years after the elimination of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).