Drug pill bursts in tummy, kills smuggler
ஆப்பிரிக்க நாடு போதை பொருள் கடத்தல் காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது :
மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார். ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. பிறகு அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி வந்திருக்கலாம் என்று கருதி இருவரையும் அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க அனுமதி பெற்றனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீர் என்று வயிறு வலிப்பதாக கூறி துடித்தான். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பலியானான். பலியானவரின் உடலை பரிசோதித்து பார்த்ததில், அவர் ‘கொகைன்’ என்ற போதை மருந்தை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதை வயிற்றில் விழுங்கி எடுத்து வந்தது தெரியவந்தது. அவர்கள் வயிற்றில் இருந்த போதை மருந்து கேப்சியூல் வெடித்ததால் அதனை கடத்திவந்தவர் பலியாகினார். இதையடுத்து மற்றொரு வர் வயிற்றில் இருந்து 50 போதை மருந்து கேப்சியூல்களை மருத்துவரகள் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
Drug pill bursts in tummy, kills smuggler
A Tanzanian, arrested at Mumbai airport on suspicion of carrying drugs in his body, complained of pain and died after security men chased and caught him when he tried to give them the slip. He passed away on the way to hospital. The autopsy report said a drug-filled capsule had burst in his abdomen. Officials said a white powder had come out of his mouth. An accomplice, also arrested by the Air Intelligence Unit (AIU), has so far ejected 60 capsules from his body. The autopsy said the deceased was carrying 120 capsules, each containing 12-15g of suspected cocaine, inside him. The two Tanzanians, whose names were withheld by the AIU, were held after they landed at Mumbai airport around 4am on Monday on specific intelligence that they were carrying cocaine on their body. “When confronted, the two passengers denied carrying drugs. Nothing was found in their belongings either,” said a senior official. However, inconsistencies started emerging as they were questioned and the AIU detained them just before they could exit the airport. “One of the passengers said he had come for treatment of shoulder pain. But he showed a printout of an email to a Mumbai hospital where he had specified stomach pain,” said the official. The AIU produced the duo in a magistrate’s court around 5pm to seek permission for X-rays. At the court, one of the accused tried to escape but was quickly nabbed. After a few minutes, he complained of pain and lay down. The AIU called an ambulance to take him to hospital, but he died on the way. “A white powder came out of his mouth while he was in the ambulance,” said an AIU official. After the incident, the other passenger admitted to carrying drugs and ejected 60 capsules by Tuesday night in the hospital. “Once all capsules are out, we will examine the drug and the exact quantity,” an AIU official said. The duo seemed to be unaware of the perils of carrying drugs in the body. “Unlike other such carriers, who usually refuse food and drink, the duo ate and drank with ease. The food, at times, pushes the capsules down, causing them to explode,” the official said.