DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state”
“தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:-
அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் தீப்பற்றியுள்ளது.
இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், 2-வது அலகில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி, இன்னும் சுமார் 15 நாள்களில் சீர் செய்யப்பட்டு, மறுபடியும் மின்சார உற்பத்தி துவங்கும் என அனல் மின்நிலைய அதிகாரிகள் அறிவிக்கின்றனர். அதனால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, தமிழ்நாடு விரைவில் “மின் மிகை” மாநிலமாக மாறிவிடும் என கூறினார். ஆனால் தமிழ்நாடு ‘மின் பகை’ மாநிலமாகத்தான் மாறி வருகிறது.
DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state”
மேலும் அந்த அறிக்கையில்: தீவிரவாதிகளைப் பிடித்த 238 காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா 2.53 கோடி ருபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளார். இதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. கொலைக்குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினர்களா??. அல்லது முன்பு டி.ஜி.பி அறிக்கையில் கூறியுருந்த நபர்களா என மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் தமிழக அரசு அதனைப்பற்றி விளக்கத்தை ஏன் அளிக்கவில்லை?
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீரில் கரையும் உரங்களை கொடுக்க, மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. இதை வைத்து கரும்பு மற்றும் வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு முழு மானியத்தோடு நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு உண்டான நிதி மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண் துறை மூலம் உரத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்வதற்கான டெண்டர் விடப்பட வேண்டும். இந்த ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. உரம் விநியோகம் செய்ய 3 முறை டெண்டர் கோரப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தற்பொழுது 4-வது முறையாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டரை, இந்த முறையாவது உறுதி செய்ய வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்ப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.