selvaraagan irandaam ulagam movie review
இரண்டாம் உலகம் உண்மையில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி செல்வராகவனுக்கு கண்டிப்பாக கைத்தட்டலாம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த சிறிய தவறுகளை இந்த படத்தில் சரி செய்து இருக்கின்றார் படத்தின் கிரப்பிக்ஸ் மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும்.
அழகான பச்சை மஞ்சள் கலந்த நிறங்கள் நிறைந்த இடங்களை மேலும் அழகு படுத்தி காட்டயுள்ளார் ஆனால் மீண்டும் அவர் செய்த தவறு கதை கொடுக்கப்பட்ட விதம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் நிறைய பணத்தை போட்டு கிராபிக்ஸ் செய்து விடலாம் அனால் எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் நல்ல கதையை உருவாக்க முடியாது. இங்குதான் பெரிய இயக்குனர்கள் தோல்வி அடைந்து ஓரம் கட்டப் பட்டனர் ( பாரதி ராஜ , பாலச்சந்தர்,பாக்கியராஜ், கதிர், மணிரத்னம்,ect …)
கதை சரியாக இருந்தால் மட்டுமே இங்கு படங்கள் வெற்றி பெரும். கைபேசி கேமராவின் வாயிலாக எடுத்தாலும் நல்ல சரியான கதையாக இருந்தால் நமது மக்கள் அதனை துக்கி வைத்து கொண்டடி உல்லனர் இதற்கு எடுத்துக்காட்டாய் பிட்சா, வழக்கு என், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சிலந்தி போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளதை சொல்லலாம்.
நமக்குள்ளே பலர் கேள்விகளை எழுப்பி சண்டை போடுகின்றனர் நார்னிய, கிங் காங், x மென், சமீபத்தில் வந்த கிருஷ் போன்ற வேற்று மொழி திரைப்பத்திர்க்கு கை தட்டி கொண்டாடுகின்றோம் அதில் வரும் மிருக சண்டை மேஜிக் போன்றவற்றை குறை சொல்வது இல்லை ஆனால் ஒரு தமிழன் செய்தால் பாராட்டாமல் குறைகளை மட்டுமே சொல்கின்றனரே என பலருக்குள் சண்டை.
சரியான கேள்வி, ஒரு திரைப்படம் எந்த வகை படமாக இருக்க வேண்டும் என்பதை இயக்குனர்தான் முடிவு செய்யவேண்டும் அப்படியானால் இக்கதை காமெடியா, பெண்டஸீயா,ஆக்க்ஷன்னா, எதார்த்த கதையா, துப்பறியும் கதையா, காதலா, அல்லது குழந்தைகள் படமா, இதில் எந்த வகை இரண்டாம் உலகம்.
ஏற்க்கனவே பார்த்து புளித்து போன படித்த காதல் கதை மெதுவாக நகரும் வசனம் ஏற்க்கனவே பழகி போன செல்வராகவன் வசனங்கள், உண்மையான காதல் கதை ஒன்றை ஆர்யா அனுஷ்காவை வைத்து கூறும்போது வேறொரு கதை அதிலும் ஆர்யா அனுஷ்காவை வைத்து காதல் கதை வருகிறது நல்ல திரைக்கதை ஆனால் திடீர் என்று உண்மை கதைக்குள் எப்படி வேற்று உலக ஆர்யா வந்தார் ஏன் வந்தார் படம் முடியும் போது இன்னொரு உலகத்திற்கு ஏன் சென்றார் எப்படி சென்றார். தோணுவதை எடுப்பது சினிமாவாக இருக்கலாம் ஆனால் அதை பார்ப்பது மக்கள்தானே.
“ஒரு விஷயத்திற்கு கைதட்டலாம் வெள்ளைக்காரனை தமிழ் பேசவைத்ததிற்கு.”
இயக்குனர் ராமநாராயணன் நாய் காதலையும் யானை பாம்பு நட்பையும் வைத்து எடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்த பொழுது, மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் ஏன் வெற்றி அடைய வில்லை காரணம் சரியான கதை மற்றும் காமெடியா, பெண்டஸீயா,ஆக்க்ஷன்னா, எதார்த்த கதையா, துப்பறியும் கதையா, காதலா, அல்லது குழந்தைகள் படமா என்று தீர்மானித்து எடுத்தால் கண்டிப்பா எந்த ஒரு நல்ல படத்திற்கும் இங்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு உண்டு.
ஏதோ ஒரு கிராபிக்ஸ் தொழில் நுட்ப்ப கலைஞ்சர்கள் உங்களுக்கு நல்ல நெருங்கிய நண்பர்களாகி விட்டதால் நீங்கள் இப்படி தோணுவதை எல்லாம் எடுத்தால் நல்ல தயாரிப்பாளர்களை தமிழ் சினிமா இழக்க நேரிடும் உங்கள் ரசிகர்களையும் சேர்த்து.