சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு

Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM

பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல்  நடைபெற்றது. இதையடுத்து மே  8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 120 பேர் ஆதரவாக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்தார் . இந்நிலையில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கரஸின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங்,  கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி ஆகியோர் பெங்களூர் விரைந்தனர்.

முதலமைச்சர்  பதவிக்கு சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சித்தராமையா 80 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தேர்வாகியுள்ளார். 40 வாக்குகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு  கிடைத்தது.

Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM

English Summary: Siddaramaiah, the Senior Congress leader who led the Congress party’s battle against the BJP government in Karnataka, was today chosen to be the new Chief Minister. The competition was between him and the Union Labour Minister M Mallikarjuna Kharge.

 

Related posts