சேலம்: அ.தி.மு.க 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 35 ஆயிரம் ஓட்டுக்களுடன் வெற்றி முகம் : ஏற்காடு இடைத்தேர்தல்
இன்று காலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன்படி அ.தி.மு.க,. 35 ஆயிரத்து ஆயிரத்து 609 ஓட்டுக்கள் பெற்று 17 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது சுற்று தவகலின்படி முன்னிலையில் உள்ளது. 17 ஆயிரத்து 880 ஓட்டுக்கள் தி.மு.க பெற்றுள்ளது. 1,276 பேர் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என பதிவு செய்துள்ளனர்.
தே.மு.தி.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள் காலமானதை அடுத்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இதில், மூன்று பெண்கள் உள்பட 27 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. தரப்பில் சரோஜாவும், தி.மு.க., தரப்பில் மாறனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் நேரடி போட்டி இருந்தது.
வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாள் முதல், 32 அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். உச்சகட்டமாக, முதல்வர் ஜெயலிதாவும் மூன்று நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க., சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, ஏ.வ.வேலு என 20க்கும் மேற்பட்டோர் பிரசாரம் செய்தனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் இறுதி கட்ட பிரசாரத்தை நடத்தினார்.
இத்தொகுதியில் மொத்தம் 2.35 லட்சம் வாக்காளர்கள் . ஆண்கள் 1,17,771, பெண்கள், 1,16,958 ஆவர். தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 2,500 போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னிலை நிலவரம் : முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மொத்தம் பதிவான 9 தபால் ஓட்டுக்களில் அதிமுக 6 ஓட்டுக்களையும், திமுக 2 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன. ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.