siddaramaiah sworn as karnataka chief minister
13 மே 2013: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் தலை நகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு முந்தைய ஜனதா தள ஆட்சியின் போது, சித்தராமையா நிதி அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.